கவர்ச்சி விளம்பரம் செய்து ரூ.85 கோடி மோசடி : 3 பேர் கைது!!

By: Udayachandran
8 October 2020, 4:32 pm
Andhra Fraud- Updatenews360
Quick Share

ஆந்திரா : பத்தாயிரம் ரூபாய் பணம் செலுத்தினால் ஆண்டு முடிவில் 27 ஆயிரத்து 500 ரூபாய் கொடுக்கப்படும் என்று கூறி 85 கோடி ரூபாய் வசூல் செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் “வெல்பிளே“ என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை துவக்கிய 3 பேர், பத்தாயிரம் ரூபாய் பணம் கட்டினால் ஓராண்டு முடிவில் 27,500 ரூபாய் திருப்பி கொடுப்போம் என்று பிரச்சாரம் செய்தனர்.

அவருடைய பிரச்சாரத்தை உண்மை என்று நம்பி எளிதாக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்ட 12 ஆயிரத்து 600 பேர் தலா 10 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தி உள்ளனர். இதுபற்றிய தகவலறிந்த நெல்லூர் போலீசார்,வெல்பிளே நிறுவனத்திற்கு சென்று முறையான அனுமதி ஏதும் இல்லாமல் கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்து பொதுமக்களிடம் பணம் வசூலித்த அந்த நிறுவனத்தைச் சேர்ந்த சுமன், ரவி,ஸ்ரீனு ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 29 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், ஐந்து லேப்டாப்கள், ஒரு கார், 5 மொபைல் போன்கள் ஆகியவற்றை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். இது பற்றி செய்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட எஸ்பி பாஸ்கர் பூஷன்,வெல்பிளே நிறுவனத்தில் பணம் கட்டியவர்களுக்கு அவர்கள் கட்டிய பணத்தை திருப்பி கொடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார். கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் மேலும் விசாரணை நடைபெறுகிறது.

Views: - 33

0

0