வாடகை பாக்கி வைத்த சோனியா காந்தி : வெளியான நிலுவைத் தொகை விவரம் : கிண்டலடித்த பாஜக..!
Author: kavin kumar10 பிப்ரவரி 2022, 10:38 மணி
டெல்லி : டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கும், சோனியா காந்தியின் வீட்டிற்கும் வாடகை செலுத்தாமல் இருப்பது ஆர்டிஐ மனுவுக்கு அளிக்கப்பட்ட பதில் மூலமாக தெரியவந்துள்ளது.
சோனியா காந்தியின் வீட்டு வாடகை, காங்கிரஸ் தலைமை அலுவலகத்தின் வாடகை உள்ளிட்ட விவரங்களை கேட்டு, சமூக ஆர்வலர் சுஜித் படேல் என்பவர் சார்பில் ஆர்டிஐ-யின் கீழ் மனு அளிக்கப்பட்டிருந்தது.இதற்கு மத்திய வீட்டு வசதித் துறை அமைச்சகம் பதில் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-அக்பர் சாலையில் அமைந்துள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு ரூ.12,69,902 வாடகை பாக்கி உள்ளது. அதேபோல், 10 ஜன்பத் சாலையில் சோனியா வசிக்கும் வீட்டிற்கு ரூ.4,610 வாடகை பாக்கி உள்ளது.
சோனியா காந்தியின் தனிச்செயலர் வீணா ஜார்ஜ் கடைசியாக 2013, ஆகஸ்டில் வாடகை செலுத்தியுள்ளார். அவர் அரசிற்கு ரூ.5,07,911 பாக்கி வைத்துள்ளார் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.இதனிடையே சோனியா காந்தியை பாஜகவின் தஜிந்தர் பால் சிங் பக்கா கடுமையாக கிண்டல் செய்துள்ளார். வாடகை கட்ட வசதியில்லாத சோனியா காந்தியின் வங்கி கணிக்கிற்கு ரூ.10 பணத்தை அனுப்பி வைக்குமாறு அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ‘‘பதவியில் இல்லாததால்ஊழல் செய்ய முடியாமல் வாடகை செலுத்த முடியாமல் இருப்பதாகவும், அரசியல் வேறுபாட்டை தாண்டி ஒரு சக மனிதனாக அவருக்கு உதவி செய்கிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.
0
0