முன்னாள் முதலமைச்சர் வீட்டின் முன் குவிந்த ஆளுங்கட்சி தொண்டர்கள் : கல்வீச்சு..கைகலப்பு போலீசார் குவிப்பு.. பதற்றம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
17 September 2021, 4:42 pm
Ruling Party Opposite Party Clash -Updatenews360
Quick Share

ஆந்திரா : தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு வீட்டு முன் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் முற்றுகையிட்டதால் மோதல் ஏற்பட்டு கல்வீசி தாக்கிக் கொண்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் வீடுகளில் சேரும் குப்பையை சேகரித்து எடுத்துச் சொல்வதற்கு கூட ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வரி வசூல் செய்கிறது என்று தெலுங்கு தேசம் கட்சியினர் குற்றம் சாட்டி இருந்தனர்.

Chandrababu Naidu writes letter to CM YS Jagan over Praja Vedika

இந்த நடவடிக்கை மூலம் வீடுகளில் குப்பை சேர்வது கூட ஏழை மக்களுக்கு கவலையளிக்கும் விஷயமாக மாறிவிட்டது என்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். எதிர்க்கட்சியின் இந்த குற்றச்சாட்டு பெரும் அரசியல் விவகாரமாக மாறி தற்போது கல்வீச்சு வரை சென்றுவிட்டது.

தெலுங்கு தேசம் கட்சியினர் குற்றச்சாட்டை கண்டித்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ரமேஷ் இன்று அமராவதியில் உள்ள உண்டவள்ளியில் இருக்கும் சந்திரபாபு நாயுடு வீட்டு முன் போராட்டம் நடத்துவதற்காக நூற்றுக்கணக்கான கட்சித் தொண்டர்களுடன் சென்றார்.

ரமேஷ் வருகையை அறிந்து தெலுங்கு தேசக் கட்சி தொண்டர்களும் காத்திருந்தனர். இரண்டு கட்சித் தொண்டர்களும் ஒரே இடத்தில் சந்தித்துக் கொண்ட நிலையில் முதலில் ஒருவருக்கு ஒருவர் எதிராக கோஷம் எழுப்பினர்.

பின்னர் ஒரு சாரர் மற்றொரு சாரர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்த முற்பட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் போராட்டம் நடத்துவதற்காக சென்ற சட்டமன்ற உறுப்பினர் ரமேஷை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். நடைபெற்ற மோதலில் ஆளுங்கட்சி எம்எல்ஏ ரமேஷ் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுவதால் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.

Views: - 194

0

0