ஓடுபாதை குறித்து 2011’லேயே எச்சரிக்கை..! கண்டுகொள்ளாத அதிகாரிகள்..! கோழிக்கோடு விமான விபத்தில் அதிர்ச்சித் தகவல்..!

8 August 2020, 12:38 pm
runway_10_kozhikode_updatenews360
Quick Share

நேற்று இரவு துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகி 20 பேர் இறந்ததாகக் தகவல் வெளியாகி உள்ள நிலையில், கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை எண் 10 பாதுகாப்பற்றது என்றும், குறிப்பாக ஈரமான சூழ்நிலையில் தரையிறங்க பயன்படுத்தக்கூடாது என்றும் ஒரு நிபுணர் 2011’லேயே எச்சரித்திருந்தார் எனும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

மங்களூரில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 812 விபத்தில் 158 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, 2011’இல் சிவில் விமான அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் கேப்டன் மோகன் ரங்கநாதன் ஒரு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

துபாயில் இருந்து வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில் கடும் மழையில் தரையிறங்கியது.

இறந்தவர்களில் கேப்டன் தீபக் சாதே, அவரது இணை விமானி அகிலேஷ் குமார் ஆகியோர் அடங்குவதாக காவல்துறை மற்றும் விமான அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். சாதே இந்திய விமானப்படையின் (ஐஏஎஃப்) முன்னாள் விங் கமாண்டர் ஆவார். மேலும் படைகளின் விமான சோதனை நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார்.

இது தொடர்பாகப் பேசிய கேப்டன் ரங்கநாதன், மங்களூர் விபத்துக்குப் பிறகு அவர் அளித்த எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டதாக கூறினார்.

இது ஒரு டேபிள்டாப் ஓடுபாதையாகும். மேலும் ஓடுபாதையின் முடிவில் உள்ள இடையக மண்டலம் போதுமானதாக இல்லை என்று கூறியிருந்தார்.

இப்பகுதியின் நிலப்பரப்பின் அடிப்படையில், விமான நிலைய ஆணையம் ஓடுபாதையின் முடிவில் 240 மீட்டர் இடையகத்தை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அதற்கு 90 மீட்டர் மட்டுமே உள்ளது. இதை வைத்து டி.ஜி.சி.ஏ ஒப்புதல் பெற்றுள்ளது என்றும் அவர் கூறினார்.

கட்டாய 100 மீட்டருக்கு பதிலாக ஓடுபாதையின் இருபுறமும் உள்ள இடம் 70 மீட்டர் மட்டுமே என்றும் அவர் கூறினார். மழை பெய்யும் போது டேபிள்டாப் ஓடுபாதையில் செயல்படுவதற்கான வழிகாட்டுதல்கள் எதுவும் இல்லை.

சிவில் விமானப் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் சிவில் விமான இயக்குநரகத்திற்கு அனுப்பப்பட்ட பிரதிகளுடன், சிவில் விமானப் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் (காசாக்) தலைவருக்கு 2011 ஜூன் 17 அன்று எழுதிய கடிதத்தில் ரங்கநாதன், “ஓடுபாதை 10 செயல்பட அனுமதிக்கக்கூடாது. ஓடுபாதை இறுதி பாதுகாப்பு பகுதி மற்றும் ஓடுபாதையின் முடிவிற்கு அப்பால் உள்ள நிலப்பரப்பு இல்லாததால் 240 இடையாக மண்டலத்தை உடனடியாக கட்டமைக்க வேண்டும். மேலும் செயல்பாடுகள் பாதுகாப்பாக இருக்க ஓடுபாதை நீளத்தை குறைக்க வேண்டும்.” எனக் கூறியிருந்தார்.

ஏர் இந்தியா துபாயில் இருந்து கோழிக்கோடுக்கு இயக்கிய போயிங் 737 விமானத்தில் 10 குழந்தைகள், 2 விமானிகள் மற்றும் 4 கேபின் குழு உறுப்பினர்கள் உட்பட 184 பயணிகள் இருந்தனர்.