இன்று டெல்லி வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்: இருநாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது!!

Author: Aarthi Sivakumar
6 December 2021, 9:49 am
Quick Share

புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று டெல்லி வருகிறார். இரு நாடுகளுக்கு இடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.

இந்திய-ரஷ்ய உச்சி மாநாடு டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பிற்பகலில் டெல்லி வருகிறார்.

விமான நிலையத்தில் இருந்து மாநாடு நடைபெறும் அரங்கிற்கு செல்கிறார். அங்கு அவரை பிரதமர் மோடி வரவேற்கிறார். பின்னர் இரு தலைவர்களும், தங்கள் நாட்டு உயர்மட்ட குழுவினருடன் பரஸ்பரம் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

இதைத்தொடர்ந்து மோடி-புதின் இடையேயான நேருக்கு நேர் சந்திப்பு நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டுக்கு இறுதியில் இரு நாடுகளுக்கு இடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுகின்றன. இந்த மாநாடு நிறைவடைந்ததும் விளாடிமிர் புதின் நாடு திரும்புகிறார்.

இந்த மாநாட்டுக்கு முன்னதாக இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரும், ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜெய் லவ்ரோவும் சந்திக்கிறார்கள். இதைப்போல இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ரஷ்ய ராணுவ அமைச்சர் செர்ஜெய் ஷோய்குவும் சந்தித்து பேசுகின்றனர்.

Views: - 196

0

0