ஒரு டோஸ் 948 ரூபாய்..! ரஷ்ய கொரோனா தடுப்பூசியின் விலையை அறிவித்தது டாக்டர் ரெட்டீஸ் ஆய்வகம்..!

14 May 2021, 2:52 pm
Corona_Vaccine_SPutnik_UpdateNews360
Quick Share

ரஷ்ய கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் வி’இன் வெளியீடு தொடங்கியுள்ளதாகவும், தடுப்பூசியின் முதல் டோஸ் ஹைதராபாத்தில் வழங்கப்பட்டுள்ளதாகவும் மருந்து நிறுவனம் டாக்டர் ரெட்டீஸ் ஆய்வகங்கள் இன்று தெரிவித்தன.

ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதல் இறக்குமதி செய்யப்பட்ட டோஸ்கள் மே 1’ஆம் தேதி இந்தியாவில் தரையிறங்கியது. மேலும் நேற்று கசவுலி மத்திய மருந்து ஆய்வகத்திலிருந்து ஒழுங்குமுறை அனுமதி பெற்றது.

“வரவிருக்கும் மாதங்களில் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இன்னும் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றன. அதன்பிறகு, ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் இந்திய உற்பத்தி தொடங்கும்” என்று அது மேலும் கூறியுள்ளது.

தடுப்பூசியின் இறக்குமதி செய்யப்பட்ட டோஸ்களின் தற்போதைய அதிகபட்ச சில்லறை விலை ரூ 948 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு டோஸுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி உள்நாட்டில் தயாரிக்கத் தொடங்கும் போது விலை குறைய வாய்ப்பு உள்ளது எனக் கூறப்ப்படுகிறது.

சுமூகமான மற்றும் சரியான நேரத்தில் வழங்கலை உறுதி செய்வதற்கான ஒழுங்குமுறை தேவைகளை பூர்த்தி செய்ய நிறுவனம் இந்தியாவில் உள்ள ஆறு உற்பத்தி நிறுவனங்களுடன் நெருக்கமாக செயல்படுகிறது.

தேசிய தடுப்பூசி முயற்சியின் ஒரு பகுதியாக ஸ்புட்னிக் வி தடுப்பூசியை பரவலாக அணுகுவதை உறுதி செய்வதற்காக டாக்டர் ரெட்டீஸ் இந்தியாவில் அரசு மற்றும் தனியார் துறையின் பங்குதாரர்களுடன் நெருக்கமாக பணியாற்றி  வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் ஒவ்வொரு வழியையும் ஆராய்வதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

Views: - 167

0

0