கடும் கட்டுப்பாடுகளுடன் தொடங்கியது ஐயப்பன் யாத்திரை : மண்டல பூஜைக்காக நடை திறப்பு..!!

16 November 2020, 10:37 am
sabarimala-temple-updatenews360
Quick Share

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல கால பூஜைக்காக நடை திறக்கப்பட்டது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கில் தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டன. அந்த வகையில், வழிபாட்டுத்தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதியளித்தது. இதைத் தொடர்ந்து, கேரளாவில் அனைத்து கோவில்களையும் திறக்க அரசு உத்தரவிட்டது.
ஆனால், கேரளாவில் கொரோனா பரவல் முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால், கோவில்கள் மீண்டும் அடைக்கப்பட்டது.

பிறகு, கடுமையான கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை கேரள அரசு வெளியிட்டது.

இந்தநிலையில், அரசின் வழிகாட்டுதல்களுடன் சபரிமலையில், மண்டல கால பூஜைக்காக நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. ஆன்லைன் மூலமாக பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் 1000 பக்தர்களுக்கும், சனி, ஞாயிறு கிழமைகளில் 2,000 பக்தர்களுக்கும், மண்டல, மகர விளக்கு நாட்களில் 5,000 பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்படும்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை சான்றிதழை எடுத்து வருவது அவசியமாகியுள்ளது.

Views: - 23

0

0