இமயமலையில் நாயுடன் உலா வந்த துறவி..!(வீடியோ)

15 February 2020, 5:14 pm
Himalaya Sadhu - updatenews360
Quick Share

இமயமலையில் கடும் குளிரில் துறவி ஒருவர் உலாவி வந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

ஆசை பாசம் என ஐம்பூதங்களை அடக்கி வாழ்பவனே துறவி எனப்படுகிறான், அப்படிப்பட்ட துறவிகளை நாம் கோவில் குளத்தில் பார்த்திருக்கிறோம்.

தற்போது ராணுவ வீரர் ஒருவா இமயமலைப் பகுதியில் ஒரு வீடியோவை எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த நேரம் இமயமலையில் பனி சூழ்ந்திருந்தது. அதுவும் மைனஸ் 45 டிகிரி.

அந்த நேரத்தில் துறவி ஒருவர் நாயுடன் அந்த மலையில் நடந்து சென்றது பதிவாகியுள்ளது. மேலும் அவர் அமர்ந்து தியானம் செய்வது போலவும், ஒரே ஒரு சிறிய துணி ஒன்றை மட்டும் உடம்பில் மறைத்துள்ளார்.

இந்த வீடியோவை எடுப்பதை பார்த்த அவர், உடனே அவர்களிடம் பேச எழுந்து வருகிறார். இதை பார்த்த வீடியோ எடுத்தவர்கள் அதை படம்பிடிக்கவே, அவர் ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டபடி வருகிறார். இந்த வீடியோ டிவிட்டரில் அதிக பார்வையாளர்களை கடந்து வருகிறது.