மீண்டும் சர்ச்சையில் சாமியார் ஆசாரம்பாபு.. ஆசிரமத்தில் காணாமல் போன சிறுமி : நிர்வாகியின் காரில் இருந்து சடலமாக மீட்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
8 April 2022, 12:23 pm
Asaram Bapu - Updatenews360
Quick Share

உத்தரபிரதேசம் : பாலியல் வன்கொடுமை குற்றவாளியான ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்து காணாமல் போன சிறுமியின் உடல் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சை சாமியார் ஆசாரம்பாபு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 5ம் தேதி ஆசாரம்பாபு ஆசிரமத்தில் 13 வயது சிறுமி ஒருவர் காணாமல் போனதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில் ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்து சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. அந்த சிறுமியின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஆசிரமத்தைச் சேர்ந்த ஒருவரை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். கடந்த 2013-ம் ஆண்டு ஜோத்பூர் ஆசிரமத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசாராம் பாபு குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது, அவருக்கு 2018 ஆம் ஆண்டு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

Views: - 589

0

0