அயோத்திக்கு முன்பாக பூரி கடற்கரையில் கட்டி முடிக்கப்பட்ட ராமர் கோவில்..! அச்சு அசலாக ஐந்தடி உயர மணல் சிற்பம்..!
5 August 2020, 9:12 amமணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ராமர் கோவிலின் பூமி பூஜையை முன்னிட்டு, பூரி கடற்கரையில் ராம் கோயிலின் பிரதி ஒன்றை உருவாக்கியுள்ளார்.
பூமி பூஜையின் போது அயோத்தியில் உள்ள கோவிலின் மணல் சிற்பத்தை உருவாக்க ஆர்வமாக இருந்ததாக பட்நாயக் கூறினார். ஆனால் கொரோனா பாதித்ததால் பூரி கடற்கரையில் அதைச் செய்ய வேண்டியிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
“உண்மையில், நான் கடந்த ஆண்டு அயோத்தியாவுக்குச் சென்று இந்த நோக்கத்திற்காக ஒரு ஆய்வை மேற்கொண்டேன். இருப்பினும், தொற்றுநோய் காரணமாக எனது திட்டங்களை மாற்ற வேண்டியிருந்தது” என்று அவர் கூறினார்.
பட்நாயக் மேலும், கடற்கரையில் கோயிலின் ஐந்து அடி உயரத்தை அவர் உருவாக்கியுள்ளதாகவும், அதற்காக நான்கு டன் மணலைப் பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
இந்த சிற்பத்தை உருவாக்க சுமார் ஐந்து மணி நேரம் ஆனது.
“நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, கோவில் கட்டப்படப்போகிறது என்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இது எங்களுக்கு ஒரு வரலாற்று நாள்” என்று பட்நாயக் கூறினார்.
கடந்த நவம்பரில் அயோத்தியில் உள்ள இடத்தின் மீது பல தசாப்தங்களாக வழக்கு நடந்த பின்னர், அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வந்து இன்று ராமர் கோவில் கட்டுமானத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் பூமி பூஜை நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
பல விருதுகளைப் பெற்ற பட்நாயக், உலகம் முழுவதும் 60’க்கும் மேற்பட்ட சர்வதேச மணல் கலைப் போட்டிகளில் கலந்து கொண்டு நாட்டிற்காக பல பரிசுகளை வென்றுள்ளார்.