ஆந்திராவில் பல்வேறு இடங்களில் செம்மரம் கடத்தல் : தமிழகத்தை சேர்ந்த 11 பேர் கைது!!

31 January 2021, 7:39 pm
Tamilans Arrest - Updatenews360
Quick Share

ஆந்திரா : ஆந்திர மாநிலத்தில் பல்வேறு இடங்களில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 11 பேர் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்ட எஸ்பி அன்புச்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கும் போது கடப்பா மாவட்டத்தில் நள்ளிரவு முழுவதும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது கடப்பா மாவட்டம், எல்லாபள்ளி பகுதியில் போலீசார் வாகன தணிக்கை ஈடுபடும் போது சந்தேகத்திற்கு இடமாக அவ்வழியாக வந்த இருவர் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விசாரிக்கும் போது அவர்கள் சர்வதேச அளவிலான செம்மர கடத்தல்காரர்கள் ஃபக்ருதீன் மற்றும் உதவியாளர் லத்தீப் என தெரியவந்தது.

ஃபக்ருதீன் மீது ஆந்திர மாநிலத்தில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக 61 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்து விசாரணை மேற்கொள்ளும் போது கடப்பா மாவட்டத்தில் மேலும் இரண்டு இடத்தில் தமிழக கூலிகள் வைத்து செம்மரக் கடத்தலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.

கடப்பா மாவட்டம் சென்னூர் மற்றும் சித்தவட்டம் வனப்பகுதியில் கடத்தலில் ஈடுபட்ட சேலம் மாவட்டத்தை சேர்ந்த எட்டு பேர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று கார்கள்,ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் கடத்தப்பட்ட சுமார் 500 கிலோ எடையுள்ள 20 செம்மரகட்டைகளையும் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்

Views: - 0

0

0