நாட்டின் முதல் கொரோனா தடுப்பூசியை தூய்மைப் பணியாளருக்கு செலுத்தி கௌரவித்தது மத்திய அரசு..!

16 January 2021, 12:28 pm
Sanitation_Worker_First_Corona_Vaccine_UpdateNews360
Quick Share

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கம் இன்று இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் முதல் தடுப்பூசி ஒரு தூய்மைப் பணியாளருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை கடந்த ஜனவரி முதல் வாரத்தில் வழங்கியது.

இதையடுத்து நாடு முழுவதும், முதற்கட்டமாக 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி, இன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடியால் வீடியோ கான்பெரன்ஸ் முறையில் தொடங்கப்பட்டது. 

இதையடுத்து முதல் தடுப்பூசி, டெல்லியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளரான மணீஷ் குமாருக்கு, டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதையடுத்து எய்ம்ஸ் இயக்குனர், ரன்தீப் குலேரியாவும் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.

இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடியால் தடுப்பூசி போடுவதற்கான திட்டத்தின் தொடக்க விழாவில், மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தனும் எய்ம்ஸில் இருந்து கலந்து கொண்டார்.

அப்போது பேசிய சுகாதார அமைச்சர், “நான் இன்று மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். திருப்தி அடைகிறேன். கடந்த ஒரு வருடமாக நாங்கள் பிரதமரின் தலைமையில் கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறோம். இந்த தடுப்பூசி கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் சஞ்சீவானியாக செயல்படும்.” எனக் கூறினார்.

Views: - 5

0

0