சித்துவுக்கே சித்து விளையாட்டு காட்டிய காங்கிரஸ் : பஞ்சாப் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சங் சன்னி அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan6 February 2022, 5:44 pm
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னிய ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் சட்டமன்ற தேர்தல் தொடங்க உள்ளது. இதில், 117 இடங்களைக் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் வரும் 20ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது.
பஞ்சாபில் ஆளும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இருப்பினும், பஞ்சாப்பின் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார்..? என்ற கேள்வி கடந்த சில நாட்களாகவே எழுந்து வந்தது.
தற்போது முதல்வராக உள்ள சரண்ஜித் சிங் சன்னியே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. ஆனால், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து கட்சி தலைமை தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும் என்றே பேசி வந்தார்.
இந்நிலையில், லூதியானாவில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் சரண்ஜித் சிங் சன்னி என அறிவித்தார்.