அனில் தேஷ்முக் மீதான சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு..! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

8 April 2021, 5:35 pm
anil_deshmukh_updatenews360
Quick Share

மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம் பிர் சிங் அனில் தேஷ்முக் மீது சுமத்திய ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட மும்பை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு மற்றும் அதன் முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

விசாரணையின் போது, ​​நீதிபதி எஸ்.கே.கவுல் இந்த விவகாரத்தில் உள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என்றும், உள்துறை அமைச்சர் மற்றும் போலீஸ் கமிஷனர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் கூறினார்.நீதிமன்றத்தில் தேஷ்முகைப் பிரதிநிதித்துவப்படுத்திய கபில் சிபல், முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கைக் கேட்காமல் பூர்வாங்க விசாரணை இருக்க முடியாது என்றார்.

இந்த விவகாரத்தில் மகாராஷ்டிராவின் உயர் அதிகாரிகள் பலர் தொடர்பு கொண்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கபில் சிபல் சட்டம் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் போலீஸ் கமிஷனர் மீதும் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

முன்னதாக, ஏப்ரல் 5’ம் தேதி உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, விதர்பாவைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியான தேஷ்முக் மாநில அரசிலிருந்து ராஜினாமா செய்திருந்தார்.

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டில், தேஷ்முக் உயர்நீதிமன்ற உத்தரவு முக்கிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை எழுப்புகிறது என்று தெரிவித்திருந்தார். “இது நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை மட்டுமல்ல, நமது அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.” என்று அவர் மேலும் வலியுறுத்தியிருந்தார்.

எனினும் மகாராஷ்டிரா மற்றும் அனில் தேஷ்முக் மனுக்களை புறம் தள்ளி, சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு செல்லும் என அறிவித்துள்ளது.

Views: - 1

0

0

Leave a Reply