காஷ்மீர் தலைவர்களுக்கு வீட்டுக்காவல்… விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

14 February 2020, 3:33 pm
Omar 01 updatenews360
Quick Share

காஷ்மீரில் அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து வீட்டுக்காவலில் உள்ளது குறித்து விளக்கம் அளிக்கும்படி ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை, மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. அத்துடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டன.

மேலும் இணையதள சேவை, மொபைல் சேவைகளும் துண்டிக்கப்பட்டன. முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். முன்னாள் முதல்வர்கள் பரூப் அப்துல்லா, அவரது மகன் உமர் அப்துல்லா, மெஹ்பூபா சையத் உள்ளிட்டோர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வீட்டுக்காவலில் உள்ளனர்.

இதை எதிர்த்து, உமர் அப்துல்லாவின் சகோதரி சாரா அப்துல்லா, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அத்துடன், உமர் அப்துல்லாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்ற ஆட்கொணர்வு மனுவும் அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா, இது தொடர்பாக மார்ச் 2ம் தேதிக்குள் ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார்.

முன்னதாக, மனுதாரர் தரப்பில் ஆஜரான கபில்சிபல், வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டுமென்று திரும்பத் திரும்ப கேட்டார். அதை நீதிமன்றம் ஏற்கவில்லை.

Leave a Reply