மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலா..? உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!

Author: Sekar
16 October 2020, 4:26 pm
Supreme_Court_UpdateNews360
Quick Share

உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாதி அரசாங்கத்தை மகாராஷ்டிராவில் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. இது போன்ற மனுக்களை அனுமதிக்க முடியாது என தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.

“ஒரு மனுதாரராக, நீங்கள் ஜனாதிபதியை எளிதாக அணுகும் அளவுக்கு சுதந்திரம் இருக்கிறது. ஆனால் இங்கு வர வேண்டாம்” என்று உச்ச நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அரசியலமைப்பு மற்றும் சட்ட விதிகளின்படி மாநில விவகாரங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்று குற்றம் சாட்டி விக்ரம் கெஹ்லாட் அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்யக் கோரி பொது நல மனுவை தாக்கல் செய்திருந்தார்.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் மற்றும் பாலிவுட் நடிகை கங்கனா ரனவத்தின் சொத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டதன் மூலம் மாநிலத்தில் மோசமான சட்டம் ஒழுங்கு நிலைமை உள்ளதாக இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, சில சம்பவங்கள் காரணமாக மகாராஷ்டிரா போன்ற பெரிய மாநிலத்தில் அரசியலமைப்பு பின்பற்றப்படவில்லை என்று எவ்வாறு கூறலாம் என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்..

இதையடுத்து நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

Views: - 36

0

0