வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செக்ஸ் பாதிரியார் பிராங்கோ முல்லக்கல் மனு..! உச்சநீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணை..!

3 August 2020, 2:52 pm
Franco_Mullakkal_UpdateNews360
Quick Share

கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய முன்னாள் பிஷப் பிராங்கோ முல்லக்கலின் மனுவை உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 5’ம் தேதி விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி ஏ.எஸ். போபண்ணா தலைமையிலான பெஞ்ச், கற்பழிப்பு குற்றச்சாட்டுகளை கைவிடுமாறு தாக்கல் செய்துள்ள முல்லக்கலின் கோரிக்கையை விசாரிக்கும்.

தான் நிரபராதி எனக் கூறி முல்லக்கல் மனு தாக்கல் செய்ததோடு, பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் நிதி பரிவர்த்தனைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை கேரள உயர் நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.

எனினும் அவருக்கு எதிராக வலுவான சான்றுகள் இருப்பதாகவும், விசாரணையை தாமதப்படுத்த அவர் அடிக்கடி மனுக்களை நகர்த்துவதாகவும் அரசு தரப்பு வாதிட்டது.

மார்ச் மாதம் அவரை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கோட்டயத்தில் உள்ள விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து அவர் கேரள உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தார்.

ஜூன் 2018 இல், பஞ்சாபை தளமாகக் கொண்ட மிஷனரிஸ் ஆஃப் ஜீசஸ் சபையின் உறுப்பினராக இருக்கும் கன்னியாஸ்திரி, 2014 மற்றும் 2016’க்கு இடையில் ஜலந்தர் பிஷப் பிராங்கோ முல்லக்கல் தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கோட்டையத்தில் உள்ள போலீசில் புகார் அளித்திருந்தார்.

பல சுற்று விசாரணைகளுக்குப் பிறகு, கேரள காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழு அவரை 2018 செப்டம்பரில் கைது செய்தது. கடந்த ஆண்டு அவர் மீது குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.