ஆந்திர முதல்வருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..! உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரனை..!

1 December 2020, 12:05 pm
jagan_mohan_reddy_updatenews360
Quick Share

ஆந்திரா முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிரான மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுக்கிறது. மூத்த நீதிபதியின் தவறான நடத்தை குறித்து ரெட்டி குற்றம் சாட்டியதை அடுத்து இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நீதிபதி என்.வி.ரமணா மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேக்கு முன்னோடியில்லாத வகையில் கடிதம் எழுதியதையடுத்து ஆந்திர மாநில முதல்வரிடம் விளக்கம் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது.

இந்த மனுக்களை நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், தினேஷ் மகேஸ்வரி மற்றும் ஹிருஷிகேஷ் ராய் ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்கும். உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதிகளுக்கு எதிராக ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி அவர் கூறிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பதவியில் உள்ள நீதிபதிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் வருகிறது என்று அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது. அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று அவரிடம் ஷோ-காஸ் நோட்டீஸ் வழங்குமாறு மனுதாரர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜகன்மோகன் ரெட்டி, உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணாவின் முறையற்ற நடத்தை குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி, நீதித்துறை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

தெலுங்கு தேசம் கட்சி மற்றும் அதன் தலைவர் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் நலன்களைப் பாதுகாக்க சட்ட விவகாரங்களில் நீதிபதி ரமணா தலையிடுவதாக ஜெகன் மோகன் ரெட்டி குற்றம் சாட்டியிருந்தார். நீதிபதி ரமணா இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக வருவார் என்று கூறப்படும் நிலையில், இந்த குற்றச்சாட்டுகள் மேலும் பரப்பரப்பைக் கூட்டியுள்ளது.

Views: - 0

0

0