மதுபான குடோனில் வெடித்து சிதறிய பாட்டில்கள் : தீ விபத்தால் ரூ.5 கோடி மதிப்பிலான மதுபானம் எரிந்து நாசம்!!
Author: Udayachandran RadhaKrishnan28 October 2021, 11:36 am
தெலுங்கானா : ஆதிலாபாத் மாவட்டத்தில் மின் கசிவு காரணமாக மதுபான குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான மதுபான பாட்டில்கள் எரிந்து நாசமானது.
தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டத்தில் மதுபான குடோன் உள்ளது. இதிலிருந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் குடோனில் நேற்று மாலை திடீரென மின்கசிவு காரணமாக தீ பற்றி எரிய ஆரம்பித்தது. இதனையடுத்து குடோனில் பணியாற்றிய ஊழியர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால் அவர்கள் வருவதற்குள் தீ மளமளவென பரவி குடோன் முழுவதும் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. மதுபான பாட்டில்கள் தீயில் கருகி வெடித்து சிதறுவதால் தீயணைப்பு படையினர் உள்ளே செல்லாமல் வெளியிலிருந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை அணைத்தனர்.
இதில் குடோனில் வைக்கப்பட்டிருந்த ரூ.5 கோடி மதிப்பிலான மதுபான பாட்டில்கள் எரிந்து நாசமானது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு ஏற்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.
0
0