பிப்ரவரி 15 வரை பள்ளி, கல்லூரிகள் மூடல் : மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!

Author: kavin kumar
8 January 2022, 11:01 pm
Quick Share

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 15 வரை மூடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து வேகமெடுத்துள்ளது. தினசரி பாதிப்பு 40 ஆயிரத்தை கடந்து பதிவாகிறது. இதனால் மருத்துவமனைகளின் படுக்கைகள் வேகமாக நிரம்புகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் 41,434 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல் மாநிலத்தில் ஒமிக்ரான் பாதிப்பு 1,009ஆக உயர்ந்திருக்கிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பிப்ரவரி 15ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும் ஹோட்டல்கள், சினிமா அரங்குகள், உணவகங்களில் 50 சதவீத இறக்கைகளுடன் இயங்க அனுமதி. நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடம், அழகு நிலையம், பொழுதுபோக்கு பூங்காகளுக்கு தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளது.

Views: - 352

0

0