‘ஒரு பாட்டில் பீரும் அந்த 4 சிறுவர்களும்’: போதையால் கேள்விக்குறியாகும் எதிர்காலம்?…அதிர்ச்சி வீடியோ!!

Author: Aarthi Sivakumar
27 October 2021, 10:56 am
Quick Share

தெலங்கானா: உஸ்ராபாத் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் பொது ஆளுங்கட்சி வேட்பாளருடன் பிரச்சாரத்திற்கு சென்ற சிறுவர்கள் சிலர் மது அருந்தும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் உஸ்ராபாத் சட்டமன்ற தொகுதியில் ஆளுங்கட்சி வேட்பாளராக நின்று வெற்றி பெற்றவர் எடேலா ராஜேந்தர். இவர் முதலமைச்சருடன் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் தனது MLA பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

அனைத்து கட்சியினரும் அத்தொகுதியை பிடிக்க தீவிரம் காட்டுகின்றனர் அதனால் தேர்தல் பிரச்சாரமும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி சார்பில் ஸ்ரீனிவாசயதவ் போட்டியிட்டு தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், அவரது கட்சி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்த சில சிறுவர்கள் மது அருந்தும் வீடியோ வைரலாக பரவிவருகிறது. எதோ குளிர்பானம் அருந்துவதுபோல் அசால்டாக மதுவை சிறுவர்கள் மாறி மாறி குடித்துக் கொண்டிருக்கின்றனர்.

இப்படி சிறுவயதிலேயே போதைக்கு அடிமையாகிவிட்டால் நாளை அவர்களது நிலைமை என்னவாகும் என்பது கேள்விக்குறிதான். சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவும் இந்த வீடியோ குறித்து அம்மாநில காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதேபோல் சிறுவர்களுக்கு எப்படி மதுபானம் கிடைத்தது, அவர்களை மது அருந்த ஊக்கப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பலர் தங்களது எதிர்ப்புகளை பதிவிட்டுவருகின்றனர் .

Views: - 617

0

0