நடத்தாத +2 தேர்வில் 20 ஆயிரம் பேர் FAIL: ரிசல்டை கண்டித்து பள்ளி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்…பள்ளிகளை அடித்து நொறுக்கிய அதிர்ச்சி..!!

Author: Udayaraman
27 July 2021, 9:51 pm
12th Exam - Updatenews360
Quick Share

மேற்குவங்கம்: மேற்குவங்கத்தில் +2 தேர்வு முடிவுகளை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படவில்லை. இந்நிலையில், 10 மற்றும் 11ம் வகுப்பு மதிப்பெண்களை கொண்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.இந்த, தேர்வு முடிவில் 20 ஆயிரம் மாணவர்கள் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பள்ளிகள் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டது.தெற்கு 24 parganas, Murshidabad உள்ளிட்ட மாவட்ங்களில் மாணவர்கள் தங்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், தோமகல் நகர பள்ளியை சுற்றி வளைத்த மாணவர்கள் பள்ளி அலுவலகத்தை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 125

0

0