நாளுக்கு நாள் வலுவடையும் கொரோனா: டெல்லியில் காலவரையின்றி பள்ளிகள் மூடல்….முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவிப்பு..!!

9 April 2021, 6:52 pm
kejriwal - updatenews360
Quick Share

புதுடெல்லி: டெல்லியில் கொரோனா வைரஸ் பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து பள்ளிகள் காலவரையின்றி மூடப்படுவதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் முதல் அலையைவிட தற்போது 2ம் அலை மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டிய வண்ணம் உள்ளது. இதனால் மருத்துவமனை படுக்கைகள் விரைவாக நிரம்பி வருகின்றன. இதனால் ஒவ்வொரு மாநில அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி உள்ளது.

தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்றை தடுக்க, கெஜ்ரிவால் தலைமையிலான அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அம்மாநிலத்தில் மருத்துவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் டெல்லியில் பள்ளிகள் அனைத்தும் காலவரையின்றி மூட முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டதாவது,

‘கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் டெல்லியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்தும் மறு உத்தரவு வரும் வரை மூடப்படுகிறது’ இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 51

0

0