ஹிஜாப் சர்ச்சையால் மூடப்பட்ட பள்ளிகள் நாளை திறப்பு: கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு..!!

Author: Rajesh
13 February 2022, 5:43 pm
Quick Share

பெங்களூரு: ஹிஜாப் விவகாரத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் நாளை 10ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் தொடர்பான பிரச்சினைகள் தீவிரமடைந்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், ஹிஜாப் அல்லது காவித்துண்டு என எந்த வித மத அடையாளங்களையும் வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வரக்கூடாது என நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், பள்ளிகளை மீண்டும் திறக்க முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் கர்நாடகத்தில் 14ம் தேதி முதல் 10ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகளை திறக்கப்படும் என முதலமைச்சர் பசவராஜ் இன்று அறிவித்துள்ளார். அனைத்து மாவட்ட காவல் துணை ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் ஆகியோரிடம் அமைதி குழு கூட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளது.

மேலும் 10ம் வகுப்பு வரை பள்ளிகள் திறந்த பிறகு மாநிலத்தில் நிலவும் சூழல் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 515

0

0