பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே 57 ஆசிரியர்கள், 6 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி..! ஆந்திராவில் அதிர்ச்சி..!

4 November 2020, 5:52 pm
Andhra_Schools_Reopen_UpdateNews360
Quick Share

நாடு முழுவதும் கொரோனா படிப்படியாக குறைந்து வரும் நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒவ்வொரு கட்டமாக தளர்வுகளை அறிவித்து வருகிறது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் சமூக இடைவெளி மற்றும் முககவசம் உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் பள்ளிகளைத் திறந்துகொள்ள மத்திய அரசு அறிவித்திருந்தாலும் பல மாநிலங்கள் பள்ளிகளைத் திறப்பதில் தாமதம் காட்டி வருகின்றன. பெரியர்வர்களைப் போல் பள்ளியில் மாணவர்களிடம் சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை எதிர்பார்க்க முடியாத என்பதால் சில மாநில அரசுகள் பள்ளிகளைத் திறக்க தயக்கம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் ஆந்திரப்பிரதேசம் கடந்த திங்களன்று 9 முதல் 12’ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி வகுப்புகளைத் தொடங்கியுள்ளது. மாணவர்கள் பெற்றோரின் ஒப்புதலுடன் வகுப்புகளில் கலந்துகொள்கிறார்கள். 

இதற்கிடையில், ஆந்திராவின் சில மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் கொரோனா வைரஸ் பதற்றம் அதிகரித்து வருகிறது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதிக்கப்படுவது இந்த பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது. 

குறிப்பாக பிரகசம் மாவட்டத்தில் ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளிகளில் நான்கு ஆசிரியர்கள் மற்றும் மூன்று மாணவர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் ஜருகுமள்ளி மண்டலத்தில் இரண்டு மாணவர்களும் ஒரு ஆசிரியரும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஹனுமந்துனிபாடு மண்டல் பெடகொல்லப்பள்ளி உயர்நிலைப்பள்ளியில் ஒரு ஆசிரியருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பள்ளிகளில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிக அளவில் பதிவு செய்யப்படுவதால் மாணவர்களின் பெற்றோர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.

மறுபுறம், கிழக்கு கோதாவரி மாவட்டம் அம்பாஜிபேட்டா மண்டலத்தில் உள்ள கங்கலகுரு உயர்நிலைப்பள்ளியில் மதிய உணவு தயாரிக்கும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைத்து மாணவர்களுக்கும் உணவு பரிமாறுவதால் பெற்றோர்கள் கவலைப்படுகிறார்கள்.

சிலர் முன்னெச்சரிக்கை சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதாக தெரிகிறது. கூடுதலாக, 57 ஆசிரியர்கள் மற்றும் ஆறு மாணவர்களுக்கு பள்ளியின் முதல் நாளிலேயே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயங்குகிறார்கள்.

இதற்கிடையில், ஆந்திராவில் கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை திங்களன்று வீழ்ச்சியடைந்த பின்னர் செவ்வாய்க்கிழமை அதிகரித்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் பள்ளிகள் திறக்கப்பட்டது தான் என பெற்றோர்கள் கூறியதோடு, கொரோனா நிலைமை முற்றிலும் சரியாகும் வரை, பள்ளிகளை மூடி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 20

0

0