செப்டம்பரில் பள்ளிகள் திறப்பா..? மத்திய அரசின் ‘பலே’ ப்ளான்..!

7 August 2020, 6:35 pm
Quick Share

செப்டம்பர் மாதம் முதல் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை நடத்தலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.
தற்போது வரை, ஆன்லைன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில் மாணவர்களின் எதிர்காலத்தையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு வரும் செப்டம்பர் 1ஆம் தேதிக்கு பிறகு பள்ளிகளை படிப்படியாக திறக்க மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடுத்த மாதம் இறுதிக்குள் வெளியிடப்படும் எனவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட அறிவுப்புகளும் மத்திய அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், வகுப்புகளை 2 ஷிஃப்டுகள் அடிப்படையில் நடத்த வேண்டும், ஒவ்வொரு ஷிஃப்டிலும் 33 சதவீத ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியில் இருக்கலாம், காலை 8 மணி முதல் 11 மணி வரை ஒரு ஷிஃப்ட் மற்றும் மாலை 3 மணிவரை 2வது ஷிஃப்ட் என வகுப்புகள் நடத்தலாம், ஒவ்வொரு மாணவர்களுக்கும் இடையே 6 அடி இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்பன குறிப்பிடப்பட்டுள்ளது.

Views: - 12

0

0