ஆந்திராவில் மீண்டும் பள்ளிகள் திறப்பு : கடும் கட்டுப்பாடுகளுடன் மாணவர்கள் உற்சாக வருகை!!

Author: Udayachandran RadhaKrishnan
16 August 2021, 1:49 pm
Andhra School Open- Updatenews360
Quick Share

ஆந்திரா : கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஆந்திராவில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது.

கொரோனா கட்டுப்பாடுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளின் ஒருபகுதியாக ஆந்திராவில் மீண்டும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசு உத்தரவின் பேரில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊரியர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி கண்டிப்பாக போட்டுக் கொண்டிருக்க வேண்டும், பள்ளிகளில் சமூக இடைவெளி மாஸ்க் அணிவது சனிடைசர் பயன்படுத்துவது ஆகியவை கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த விதியை மீறினால் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் அரசுப் பள்ளிகளில் விதிமீறல் நடைபெற்றால் ஆசிரியர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை முழுமையாக கடைபிடித்த இன்று ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. முதல் நாளான இன்று மாநிலம் முழுவதும் சுமார் 50 சதவீத மாணவர்கள் வருகை தந்துள்ளனர்.

Views: - 258

2

0