பஞ்சாப்பில் ஓராண்டுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் உற்சாக வருகை..!!

Author: Aarthi Sivakumar
2 August 2021, 10:40 am
Quick Share

அமிர்தசரஸ்: பஞ்சாப்பில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து ஓராண்டுக்கு பின் சில பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன.

நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவலை முன்னிட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலானது. இதனை முன்னிட்டு பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டன.

பல மாநிலங்களில் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு பின் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து கொரோனா 2வது அலையின் தீவிரம் குறைந்துள்ள நிலையில், மாநிலங்களில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கொரோனா பரவல் குறித்து சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் பஞ்சாப்பில் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து பள்ளிகள் ஓராண்டுக்கு பின் இன்று மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன. பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி மாணவ மாணவியர் சீருடை அணிந்து, முக கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து பள்ளிகளுக்கு ஆர்வமுடன் வருகை புரிந்தனர். நீண்ட நாட்களுக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள், மாணவிகள் தங்களது நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களை சந்தித்து மகிழ்ச்சி அடைந்தனர்.

Views: - 315

0

0