டெல்லியில் இன்று முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறப்பு : புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan9 August 2021, 8:59 am
டெல்லி : கொரோனா தொற்று குறைந்த நிலையில் இன்று முதல் 10 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். உயிர் பலிகளும் நாளுக்நு நாள் அதிகரித்து வந்த நிலையில் மத்திய மாநில அரசுகளின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொற்று குறைந்தது வந்தது.
பல்வேறு இடங்களில் போடப்பட்ட ஊரடங்குகள், கட்டுப்பாடுகளை டெல்லி அரசு தளர்த்தி வந்தது. இந்த நிலையில் டெல்லியில் பள்ளிகளை திறக்க அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார்,
அதன்படி, 10ஆம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்படுகின்றன. புதிய மாணவர்கள் சேர்க்கை தொடர்பான பணிக்காகவும், ஆலோசனை பெறுவதற்காகவும், தேர்வுகளுக்கான செய்முறை வகுப்புகளுக்காகவும் பள்ளிகளுக்கு வரலாம் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.
இதனால் பள்ளிகளுக்கு வர விரும்பும் மாணவர்கள் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையுடன் வர வேண்டும் என்றும், பள்ளிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளுடன் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
0
0