குஜராத்தில் செப்., 2ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை..!!

Author: Udayachandran RadhaKrishnan
25 August 2021, 8:08 pm
Gujarat Schools Open -Updatenews360
Quick Share

காந்திநகர்: குஜராத்தில் செப்டம்பர் 2ம் தேதியிலிருந்து 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது.

குஜராத்தில் தொற்று குறைந்துள்ள நிலையில், அம்மாநில அரசு 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் செப்டம்பர் 2 முதல் 50 சதவீத மாணவர்களுடன் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் ரூபானி இதனை அறிவித்ததாக கல்வித்துறை அமைச்சர் பூபேந்திரசிங் சுடசாமா தெரிவித்தார். குஜராத்தில் தற்போது 160 பேர் மட்டுமே நோய்த் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை மொத்தம் 8,15,091 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 10,079 பேர் நோய்த் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். முன்னதாக ஜூலை மாத தொடக்கத்தில், புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் கணிசமாகக் குறைந்துள்ளதை அடுத்து, 12ம் வகுப்பு கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான பள்ளிகளை மீண்டும் திறக்க குஜராத் மாநில அரசு அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 268

0

0