டெல்லி இந்தியா கேட் பகுதியில் 144 தடை உத்தரவு..! டெல்லி காவல்துறை அதிரடி..!

Author: Sekar
2 October 2020, 5:31 pm
Delhi_India_Gate_Updatenews360
Quick Share

ஹாத்ராஸ் கூட்டு பாலியல் பலாத்காரம் குறித்து நாடு தழுவிய சீற்றத்திற்கு மத்தியில், டெல்லி காவல்துறை இன்று டெல்லியின் இந்தியா கேட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவை அமல்படுத்தியுள்ளது. ஜந்தர் மந்தரில் 100 பேர் வரை அனுமதிக்கப்படுவதாகவும், ஆனால் முன் அனுமதி பெற்றே கூட்டம் நடத்த முடியும் என காவல்துறை கூறியுள்ளது.

“செப்டம்பர் 3’ம் தேதி டெல்லி மேம்பாட்டு ஆணையம் வழங்கிய உத்தரவின் மூலம், ஜந்தர் மந்தர் உள்ளிட்ட அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் தகுதிவாய்ந்த அதிகாரத்தின் முன் அனுமதியுடன் மொத்தம் 100 பேர் வரை கூடியிருக்க அனுமதி வழங்கப்படுவதாக பொது மக்களுக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.” என டெல்லி காவல்துறை  அதிகாரி ஈஷ் சிங்கால் கூறினார்.

ஹாத்ராஸ் கூட்டு பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்குக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி இன்று இந்தியா கேட்டில் போராட்டம் நடத்த திட்டமிட்டதை அடுத்து இந்த உத்தரவு வந்துள்ளது.

இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “காட்டுமிராண்டித்தனமான ஹாத்ராஸ் சம்பவத்திற்கு எதிராக ஒற்றுமையுடன் நிற்போம்.” என ட்வீட் செய்துள்ளது.

முன்னதாக இந்த வார தொடக்கத்தில், விவசாய சீர்திருத்த மசோதாக்களை எதிராக இந்தியா கேட் அருகே ஒரு பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது காங்கிரஸ் தொண்டர்கள் ஒரு டிராக்டரை எரித்தனர். இது தொடர்பாக டெல்லி காவல்துறை குறைந்தது 10 பேரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 44

0

0