நிலைமை ரொம்ப சீரியஸ்..! லடாக் எல்லையை ஆய்வு செய்த ராணுவத் தளபதி கருத்து..!

4 September 2020, 1:27 pm
Army_Chief_Naravane_UpdateNews360
Quick Share

இராணுவத் தளபதி முகுந்த் நாரவனே இன்று சீன எல்லையில் உள்ள நிலைமை மிகவும் தீவிரமானது என்றும், தற்போதைய முன்னேற்றங்களை அடுத்து பாதுகாப்பை மேம்படுத்த இராணுவம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும் கூறினார். 

லடாக் எல்லையில் கடந்த மே மாதம் தொடங்கி கைகலப்புகள் அவ்வப்போது நடந்து வந்த நிலையில், ஜூன் மாதம் நடந்த ஒரு மிகப்பெரிய மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். சீனத் தரப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், 35-40 வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என உளவுத்துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

லடாக் எல்லையில் கடந்த ஜூன் மாதம் நடந்த வன்முறை மோதலுக்கு பிறகு, ஆகஸ்ட் 29-30 இரவில் தொடங்கி 3 முறை எல்லையில் மீண்டும் கடும் மோதலை தூண்டியதை அடுத்து, லடாக் செக்டரின் இரண்டு நாள் பாதுகாப்பு மறுஆய்வுக்காக நாரவனே நேற்று லேவை அடைந்தார். அங்கு இந்தியா மற்றும் சீனா படைகள் கிட்டத்தட்ட 1,00,000 வீரர்கள் மற்றும் ஆயுதங்களை மிகவும் முக்கியமான பகுதிகளில் நிறுத்தியுள்ளன.

எல்லையை ஆய்வு செய்த ராணுவத் தலைமைத் தளபதி, மூன்று மாதங்களுக்கும் மேலாக நிலைமை மிகவும் தீவிரமாக உள்ளது என்று கூறினார். நிலைமையைத் தீர்க்க இராணுவ மற்றும் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

வீரர்கள் மிகவும் உந்துதலோடு உள்ளதாகவும், எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்க முழுமையாக தயாராக உள்ளனர் என்று கூறிய அவர் மேலும், “நம் அதிகாரிகளும் வீரர்களும் உலகின் மிகச்சிறந்தவர்கள். அவர்கள் இராணுவத்தை பெருமைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் தேசத்தையும் பெருமைப்படுத்துவார்கள்.” எனக் கூறினார்.

Views: - 0

0

0