ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளின் தாக்குதல்: பாதுகாப்பு படையினர் 16 பேர் பலி..!!

5 February 2021, 11:50 am
thaleeban attack - updatenews360
Quick Share

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 16 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் வடக்கே குண்டூஸ் மாகாணத்தில் கான் அபாத் மாவட்டத்தில் பாதுகாப்பு படை முகாம் மீது நேற்றிரவு திடீரென தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 16 பேர் கொல்லப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர 2 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அரசுக்கும், தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்து வந்தபோதிலும் அந்த அமைப்பு தொடர்ந்து அதிரடியான தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகிறது.

Views: - 24

0

0