ஜார்க்கண்டில் அதிக சக்தி வாய்ந்த 100 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்…!!!

Author: Aarthi
12 October 2020, 8:55 am
jarkhand - updatenews360
Quick Share

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிக சக்தி வாய்ந்த 100 கிலோ வெடிபொருட்களை பதுக்கிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் பாகூர் நகரின் ஹிரன்பூர் பகுதியில் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து போலீசார் குழு அந்த பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர், 100 கிலோ எடை கொண்ட அதிக சக்தி வாய்ந்த அம்மோனியம் நைட்ரேட் வகை வெடிபொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து வெடிபொருட்களை பறிமுதல் செய்த போலீசார், மேலும் 400 நியோ ஜெல் என்ற வேதிபொருள் அடங்கிய துண்டு பொருட்களையும், 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் கைப்பற்றினஙர . அந்த நபரை கைது செய்து தப்பியோடிய மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Views: - 36

0

0