வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யத் தேவையில்லை..! மூத்த குடிமக்களுக்கு மிகப்பெரிய ரிலீஃப் கொடுத்த மத்திய பட்ஜெட்..!
1 February 2021, 1:33 pmஓய்வூதிய வருமானம் மட்டுமே உள்ள 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
அவர்களுக்கு வருமானம் செலுத்தும் வங்கி அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து தேவையான வரியைக் கழிக்கும். மூத்த குடிமக்களுக்கு அதிக வரி சலுகைகளை வழங்குவதற்காக பட்ஜெட் 2018 வரிச் சட்ட மாற்றங்களை அறிவித்த பின்னர் இது வந்துள்ளது.
வருமான வரிச் சட்டம், 1961’இல் 80TTB என்ற புதிய பிரிவை அறிமுகப்படுத்துதல், சுகாதார காப்பீட்டுத் தொகை இல்லாதிருந்தால் மருத்துவ செலவினங்களுக்கான விலக்கு போன்ற வரி சலுகைகள் இதில் அடங்கும்.
பிரிவு 80TTB’இன் கீழ், வயதானவர்கள் தங்கள் வருமானத்திலிருந்து வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களிலிருந்து பெறப்பட்ட ரூ 50,000 வட்டி வருமானத்தை விலக்கு அளிக்கக் கோரலாம். இதன் மூலம் மூத்த குடிமக்களுக்கு வட்டி வருமானம் ரூ 50,000 வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
முன்னதாக, மூத்த குடிமக்கள் வங்கி மற்றும் தபால் அலுவலக சேமிப்புக் கணக்குகளிலிருந்து வட்டி வருமானத்திற்கு இதேபோன்ற வரி விலக்கு பெற்றனர். ஆனால் பிரிவு 80TTA’இன் கீழ் ரூ 10,000 வரை மட்டுமே பெற்று வந்த நிலையில், தற்போது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.
வருமான வரி அறிக்கை தாக்கல் செய்பவர்களும் 2014’ஆம் ஆண்டில் 3.31 கோடியிலிருந்து 2020’ஆம் ஆண்டில் 6.48 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த மத்திய பட்ஜெட்டை 2021-22 திங்களன்று சீதாராமன் முன்வைத்தார்.
கொரோனா சூழலால் சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக இந்த பட்ஜெட் காகிதமற்ற முறையில், டிஜிட்டல் வடிவத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0
0