காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார் : பிரதமர் மோடி, ராகுல் உள்ளிட்டோர் இரங்கல்!!

25 November 2020, 8:20 am
ahamed Patel - Updatenews360
Quick Share

டெல்லி : காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் காலமனார். அவருக்கு வயது 71.

கடந்த அக்டோபர் 1ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா தொற்றில் இருந்து குணம்டைந்த அவர் கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்கு ஆளானார்.

அகமது படேலின் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பாதிப்பு மற்ற உறுப்புகளுக்கும் பரவியது. இதையடுத்து மேதாந்தா மருத்துவமனையில் கடந்த 14ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் தொடர் கண்காணிப்பில் மருத்துவர்கள் ஈடுபட்டும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. இந்த நிலையலி இன்று அதிகாலை 3.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவரின் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு பெரும் இழப்பாக கருதப்படுகிறது. இந்த நிலையில் அகமது படேல் மறைவான இன்றைய நாள் சோகமான நாள் என்றும், காங்கிரஸ் கட்சியின் தூணாக விளங்கிய அகமது படேல் குடும்பத்திற்க ஆழ்ந்த இரங்கல் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதே போல பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பொது சேவைக்காக வாழ்க்கையை அற்பணித்தவர் அகமது படேல் என புகழாரம் சூட்டியுள்ளார். அவரது மகனிடம் ஆறுதல் கூறியதாகவும், அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0