ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவு: புதிய உச்சத்தை எட்டிய சென்செக்ஸ், நிஃப்டி..!!

5 February 2021, 5:12 pm
sensex - updatenews360
Quick Share

மும்பை: ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி இன்று வரலாற்றில் முதன்முறையாக புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

வரலாற்றில் முதன்முறையாக 51 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டிய மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வணிகநேர முடிவில் ஐம்பதாயிரத்து 732 புள்ளியில் நிறைவடைந்தது. மூன்றாம் காலாண்டு இலாப நட்ட அறிக்கையைப் பல நிறுவனங்கள் வெளியிட்டதால் பங்குச்சந்தைகளில் இன்று காலையில் வணிகம் ஏற்றமடைந்தது.

பத்து மணியளவில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 401 புள்ளிகள் உயர்ந்து வரலாற்றில் முதன்முறையாக 51 ஆயிரத்து 15 என்கிற வரம்பைத் தொட்டது. வணிக நேர முடிவில் சென்செக்ஸ் 117 புள்ளிகள் உயர்ந்து ஐம்பதாயிரத்து 732 ஆக இருந்தது. தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு நிப்டி 29 புள்ளிகள் உயர்ந்து 14ஆயிரத்து 924 ஆக இருந்தது.

இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு தற்போதைய மற்றும் வளர்ந்து வரும் பொருளாதார நிலைமையின் மதிப்பீட்டின் அடிப்படையில், பணப்புழக்க சரிசெய்தல் வசதியின் கீழ் கொள்கை ரெப்போ விகிதத்தை 4.0 என்ற அளவில் மாற்றாமல் வைக்க முடிவு செய்துள்ளது. இதனாலும் சென்செகஸ் உயர்ந்து உள்ளது.

அதிகப்பட்சமாக பாரத ஸ்டேட் வங்கியின் பங்கு விலை 11 சதவீதம் உயர்ந்தது. கோட்டக் வங்கி, டாக்டர் ரெட்டி, அல்ட்ராடெக் சிமென்ட், ஐடிசி மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கி ஆகியவை தொடர்ந்து உள்ளன. மறுபுறம், ஆக்சிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, மாருதி மற்றும் எச்.சி.எல் டெக் ஆகியவை பின்தங்கிய நிலையில் இருந்தன.

Views: - 0

0

0