சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் சோதனைகள் நிறுத்தம்..! கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் பின்னடைவு..!

10 September 2020, 4:32 pm
serum_institute_of_india_updatenews360
Quick Share

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) அஸ்ட்ராஜெனெகாவின் கொரோனா தடுப்பூசி சோதனைகளை பிரிட்டிஷ் நிறுவனம் அஸ்ட்ராஜெனெகா சோதனைகளை மீண்டும் தொடங்கும் வரை நிறுத்தி வைத்துள்ளது என்று சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.   

கொரோனா வைரஸ் தடுப்பூசி வேட்பாளரின் கட்டம் 2 மற்றும் 3 மனித மருத்துவ பரிசோதனைகளை நடத்த புனேவைச் சேர்ந்த எஸ்ஐஐக்கு கடந்த மாதம் டிசிஜிஐ அனுமதி வழங்கியிருந்தது.

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி உலக சுகாதார அமைப்பால் உலகின் முன்னணி தடுப்பூசியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சோதனைகளை இடைநிறுத்துவது தடுப்பூசி மேம்பாட்டு செயல்முறையை தாமதப்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் சீரம் நிறுவனம் முன்னணியில் உள்ளது.

தடுப்பூசியை தயாரிப்பதற்காக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்த பிரிட்டிஷ்-ஸ்வீடிஷ் உயிர் மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா, சோதனைகளின் இடைநிறுத்தம் விவரிக்கப்படாத நோய் காரணமாகவே ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.  

“நாங்கள் நிலைமையை மறுபரிசீலனை செய்கிறோம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா சோதனைகளை மீண்டும் தொடங்கும் வரை இந்தியாவில் சோதனைகளை இடைநிறுத்துகிறோம். இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரலின் (டிஜிசிஐ) அறிவுறுத்தல்களை பின்பற்றி இந்த முடிவை எடுத்துள்ளோம். சோதனைகள் குறித்து மேலும் கருத்து தெரிவிக்க முடியாது” என்று சீரம் ஒரு சுருக்கமான அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அஸ்ட்ராஜெனெகா சோதனையில் உள்ள ஒரு நபரிடம் எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டதை அடுத்து மற்ற நாடுகளில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளை இடைநிறுத்தியது.  இந்த சோதனையின் பகுப்பாய்வுகளை சமர்ப்பிக்காதது குறித்தும் தடுப்பூசி தயாரிப்பாளருக்கு டி.சி.ஜி.ஐ அறிவிப்பு கடிதம் வெளியிட்ட ஒரு நாள் கழித்து எஸ்ஐஐ முடிவு வந்துள்ளது.

Views: - 0

0

0