ஒரு மகன் மீது பாலியல் வழக்கு, மற்றொரு மகன் மீது போதை வழக்கு : பதவியை ராஜினாமா செய்த கம்யூனிஸ்ட் பிரமுகர்!!

13 November 2020, 5:08 pm
Kodiyery Balakrishnan - Updatenews360
Quick Share

கேரளா : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பதவியில் இருந்து கொடியேறி பாலகிருஷ்ணன் விலகியுள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இரு மாதங்களுக்கு முன்பு கைதான போதைப் பொருள் கும்பலுக்கு பணப்பரிமாற்றம் செய்த புகாரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் மகன் சிக்கினார்.

இதையடுத்து கொடியேறி பாலகிருஷ்ணன் இளைய மகன் பினீஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கொடியேறியின் மூத்த மகனால் பினோய் என்பவரும் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியுள்ளார்.

இதனால் மன உளைச்சலில் காணப்பட்ட கொடியேறி பாலகிருஷ்ணன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

எதிர்வரும் கேரள உள்ளாட்சி தேர்தலில் இந்த சம்பவம் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 32

0

0