கர்நாடக முதல்வருடன் சரத்பவார் சந்திப்பு: நதிநீர் பங்கீட்டு பிரச்சினை குறித்து ஆலோசனை

Author: kavin kumar
6 August 2021, 10:58 pm
Quick Share

நதிநீர் பங்கீட்டு பிரச்சினை குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

பெங்களூருவில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, புதிய அமைச்சர்கள் ஆர்.அசோக், சுதாகர், அஸ்வத் நாராயண் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பு குறித்து பசவராஜ் பொம்மை வெளியிட்ட அறிக்கையில், “இரு மாநிலங்கள் இடையே உள்ள நதிநீர் பங்கீட்டு பிரச்சினை குறித்து ஆலோசிக்கப்பட்டது. வெள்ள காலத்தில் இரு மாநிலங்களும் பரஸ்பரம் புரிந்துணர்வுடன் செயல்படுவது குறித்தும் பேசினோம். நீர் பங்கீட்டு பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்வது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தையை டெல்லியில் நடத்த தீர்மானிக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

Views: - 330

0

0