முட்டி போட்ட தவான்! தினேஷ் கார்த்திக் என்ன செய்தார் பாருங்க! (வீடியோ)

2 May 2021, 3:38 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட்டில், தினேஷ் கார்த்திக் ஸ்டம்பிங் முயற்சி செய்து கத்த, கிரீசில் நின்ற ஷிகர் தவான் அவரிடம் முட்டி போட்டு நிலைமையை களேபரம் ஆக்கினார். பின்பு இருவரும் சிரித்து கொண்டனர். இந்த வீடியோ டுவிட்டரில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் லீக் போட்டி ஒன்றில், மோர்கன் தலைமையிலான கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டில்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த கோல்கட்டா அணி 154 ரன்கள் எடுத்தது. சுலபமான இலக்கை நோக்கி விளையாடிய டில்லி அணி ஷிகர் தவான் மற்றும் பிரித்வி ஷா ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஷிகர் தவான் 46 ரன்கள், பிரித்வி ஷா 82 ரன்கள் குவித்தனர்.

இந்நிலையில், போட்டியில் சுனில் நரைன் வீசிய ஒரு ஓவரில், லெக் சைடில் சென்ற பந்தை பிடித்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், ஷிகர் தவானை ஸ்டம்பிங் செய்ய முயற்சி செய்தார். பின் அவரிடமே ‘ஹவ் இஸ் தட்’ என வேகமாக கத்தினார். அப்போது தவான் கிரீசில் தான் நின்று கொண்டிருந்தார். உடனே தவான் தனது பேட்டை கீழே போட்டு விட்ட, தினேஷ் கார்த்திக்குக்கு முன்பாக முட்டி போட்டார். பின் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து பரஸ்பரம் சிரித்து கொண்டனர். இதனால் இந்த விஷயம் தமாஷாக முடிந்தது. இந்த வீடியோவை, இந்தியன் பிரீமியர் லீக் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது. கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் இதனை ரசிக்க, அது வைரலாகி உள்ளது.

இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வீடியோவை பார்த்து ரசித்திருக்கின்றனர். 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் லைக்ஸ்களை குவித்திருக்கின்றனர். பலரும் கமெண்ட்ஸில் காமெடியாக கருத்துக்களை பதிவிட்டு வைரலாக்கி உள்ளனர்.

Views: - 73

1

0

Leave a Reply