கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் பெயர் மாற்றம்..!புதிய பெயரை அறிவித்தார் மோடி..!

8 November 2020, 7:19 pm
PM_Modi_UpdateNews360
Quick Share

கப்பல் போக்குவரத்து அமைச்சகம் விரைவில், துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம் என பெயர் மாற்றப்பட உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்தார்.

சூரத்தில் ஹசிராவிற்கும் பாவ்நகர் மாவட்டத்தில் கோகாவிற்கும் இடையில் ரோ-பாக்ஸ் படகு சேவையைத் தொடங்கிய பின்னர் அவர் ஒரு கூட்டத்தில் உரையாற்றினார். இந்த ரோ-பாக்ஸ் படகு சேவை இரு இடங்களுக்கிடையில் கிட்டத்தட்ட 370 கி.மீ சாலை தூரத்தை நீர்வழிப்பாதையில் 90 கி.மீ வரை குறைக்கும்.

அப்போது பேசிய மோடி, “நாட்டின் கடல் பகுதி ஆத்மநிர்பர் பாரதத்தின் ஒரு முக்கிய பகுதியாக வெளிப்படும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசாங்கத்தின் முயற்சியை அதிகரிக்க, இன்னும் ஒரு பெரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இப்போது, கப்பல் அமைச்சகம் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம் என மறுபெயரிடப்படுகிறது. மேலும் இந்த அமைச்சகம் தற்போது விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. 

வளர்ந்த பொருளாதாரங்களில், பெரும்பாலான இடங்களில், கப்பல் அமைச்சகம் துறைமுகங்கள் மற்றும் நீர்வழிகளைப் பார்த்துக் கொள்கிறது. இந்தியாவில், கப்பல் அமைச்சகம் துறைமுகம் மற்றும் நீர்வழிகள் தொடர்பான பல பணிகளைச் செய்கிறது. எனவே செய்யும் பணிக்கு ஏற்ப பெயரில் தெளிவு இருக்கும் வகையில் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது” என்று கூறினார்.

Views: - 19

0

0

1 thought on “கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் பெயர் மாற்றம்..!புதிய பெயரை அறிவித்தார் மோடி..!

Comments are closed.