முன்னாள் கடற்படை அதிகாரியைத் தாக்கிய சிவசேனா தொண்டர்கள்..! மும்பையில் பரபரப்பு..!

12 September 2020, 9:37 am
Ex_Navy_Madan_Sharma_UpdateNews360
Quick Share

ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி மதன் சர்மா மீது தாக்குதல் நடத்திய வழக்கில் சிவசேனாவின் கமலேஷ் கதம் உட்பட 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக மும்பை போலீசார் தெரிவித்தனர்.

முன்னாள் கடற்படை அதிகாரியை அடித்ததற்காக கதம் மற்றும் அவரது 8-10 கூட்டாளிகளுக்கு எதிராக மும்பையின் சம்தா நகர் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

62 வயதான ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ஒருவர், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே குறித்து வாட்ஸ்அப்பில் நேற்று கார்ட்டூன் ஒன்றை அனுப்பியதாக சிவசேனா தொண்டர்கள் குற்றம் சாட்டி இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

தான் அனுப்பிய வாட்ஸ்அப் பதிவுக்கு அச்சுறுத்தல் அழைப்புகள் வந்ததை அடுத்து 8 முதல் 10 பேர் தாக்கியதாக மதன் சர்மா தெரிவித்தார். “நான் எனது வாழ்நாள் முழுவதும் தேசத்துக்காக உழைத்திருக்கிறேன். இது போன்ற ஒரு அரசாங்கம் இருக்கக்கூடாது.” என சர்மா மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையே ஓய்வுபெற்ற அதிகாரியின் மகள் மும்பை காவல்துறையினரை விமர்சித்து, போலீசார் தங்கள் இல்லத்திற்கு வந்து, தந்தையை அவர்களுடன் அழைத்துச் செல்வதாக கட்டாயப்படுத்தினர் என தெரிவித்துள்ளார்.

சர்மாவுக்கு கண்ணில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து பதிலளித்த பாஜகவும், மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சித் தலைவருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் அதிர்ச்சியை வெளிப்படுத்தியதோடு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாநில முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

கங்கனா ரனவத்தில் ஆரம்பித்து தற்போது நாட்டிற்காக தங்கள் உயிரை துச்சமென மதித்து சேவை செய்த முன்னாள் பாதுகாப்புப் படையினரையும் சிவசேனா கட்சியினர் தாக்கி வருவது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இதன் மூலம் குண்டர்களின் ராஜ்ஜியமாக மகாராஷ்டிரா மாறி வருவதாகக் கூறப்படும் நிலையில், உத்தவ் அரசை களைத்து விட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை மகாராஷ்டிராவில் அமல்படுத்த வேண்டும் எனும் முழக்கங்கள் அதிகரித்து வருகிறது.

Views: - 10

0

0