சுகாதார துறை அமைச்சர் மீது உதவி காவல் ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதில் காயம் அடைந்த அவரது நிலைமை கவலைக்கிடம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஒடிசாவில் சுகாதார மற்றும் குடும்பநல துறை மந்திரியாக இருப்பவர் நபா தாஸ். இவர் பிரஜாராஜ்நகரில் காந்தி சவுக் பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வாகனத்தில் சென்றுள்ளார்.
அவர் தனது வாகனத்தில் இருந்து இறங்கும்போது, திடீரென உதவி காவல் ஆய்வாளர் ஒருவர், அவர் மீது அதிரடியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், அவரது நெஞ்சு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது.
அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரது நிலைமை கவலைக்கிடம் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, ஜார்சுகுடா விமான நிலையத்திற்கு அவரை கொண்டு சென்று, பின்னர் விமானத்தில் புவனேஸ்வருக்கு அவரை கொண்டு செல்ல இருக்கின்றனர்.
ஒடிசா அமைச்சரின் பாதுகாப்புக்காக இருந்த காவல் உயரதிகாரியான கோபால் தாஸ் என்பவர், மிக நெருக்கத்தில் திடீரென நான்கைந்து முறை துப்பாக்கியால் மந்திரியை நோக்கி சுட்டது சுற்றியிருந்தவர்கள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
இந்த தாக்குதலுக்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. தொடர்ந்து கோபாலிடம் விசாரணை நடந்து வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.