சித்துவால் ஆட்டம் காணும் காங்கிரஸ் : முக்கிய பதவி ராஜினாமா.. அடுத்தது தாவப் போகும் கட்சி இதுவா?

Author: Udayachandran RadhaKrishnan
28 September 2021, 3:38 pm
Siddhu- Updatenews360
Quick Share

பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்தார்.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு நவ்ஜோத் சிங் சித்து அனுப்பியுள்ளார்.

அதில், காங்கிரஸ் கட்சியின் எதிர்கால நடவடிக்கை கருத்தில் கொண்டு அதன் நலனைக் காக்கும் வகையில் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், நவ்ஜோத் சிங் சித்து இடையே ஏற்கனவே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், பஞ்சாப் முதல்வர் பதவியிலிருந்து அமரீந்தர் சிங் விலகிய நிலையில், நவ்ஜோத் சிங் சித்து தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சித்து வின் ராஜினாமாவால் காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு வேளை அம்ரீந்தர் சிங் ராஜினாமா செய்ததால் தனது பணி முடிவடைந்தது என சித்து இந்த முடிவை எடுத்தாரா அல்லது அம்ரீந்தர் சிங் பதவியை ராஜினாமா செய்ததால் கட்சிக்குளு கொடுத்த அழுத்தம் காரணமாக பதவியில் இருந்து விலகினாரா என்பது விரைவில் தெரியவரும்.

தற்போது காங்கிரஸ் கட்சியில் சித்துவுக்கு மவுசு குறைந்து கொண்டே வருவதால் ஒருவேளை ஆம் ஆத்மியில் சேருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது பாஜகவின் ஆபரேஷன் என்ற தகவலும கசிந்துள்ளது.

ஏற்கனவே நமது தளத்தில் சித்துவால் காங்கிரஸ் கட்சி ஆட்டம் காண்கிறது என்பதை கூறியிருந்தோம் என்பது நினைவுகூரத்தக்கது.

Views: - 329

0

0