அமைதியாய் இருப்பது பலவீனம் அல்ல..! மௌனம் கலைத்தார் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே..!

13 September 2020, 2:14 pm
Uddhav_Thackery_UpdateNews360
Quick Share

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே ஒரு வீடியோ கான்பெரன்ஸ் மூலம் இன்று மக்களிடையே உரையாற்றியபோது, மகாராஷ்டிராவை இழிவுபடுத்துவதற்கு ஆர்வமுள்ள ஒரு கூட்டம் தீவிரமாக முயற்சிப்பதாக கூறினார். 

அதில் மராத்தியில் பேசிய உத்தவ் தாக்கரே, சமூக இடைவெளிக்கான வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும், கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் முககவசம் அணியவும் மக்களை வலியுறுத்தினார். “எந்த அரசியல் புயல்கள் வந்தாலும் நான் எதிர்கொள்வேன். கொரோனா வைரஸையும் எதிர்த்துப் போராடுவேன்” என்று அவர் கூறினார்.

கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக ‘எனது குடும்பம்-எனது பொறுப்பு’ என்ற பிரச்சாரத்தை நாங்கள் தொடங்குகிறோம் என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே வீடியோ கான்பெரன்ஸ் மூலம் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் மேலும் “இந்த நேரத்தில் நான் அரசியல் பற்றி பேச விரும்பவில்லை. ஆனால் இது என்னிடம் பதில் இல்லை என்று அர்த்தமல்ல. மகாராஷ்டிராவை இழிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, மகாராஷ்டிராவை இழிவுபடுத்துபவர்கள் பற்றி நான் பேசுவேன்.” எனத் தெரிவித்தார்.

“கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸைத் தடுக்க நாங்கள் நிறைய வேலைகளைச் செய்துள்ளோம். நாங்கள் அரசியல் நெருக்கடியையும் எதிர்த்துப் போராடுவோம்” என்று தாக்கரே கூறினார்.

கொரோனா வைரஸ் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளின் இரட்டை சிக்கலை எதிர்கொள்ளும் சூழ்நிலையில், மக்கள் கட்டுப்பாட்டைக் கடைபிடித்து வேலை செய்யவும் உத்தவ் கேட்டுக்கொண்டார்.

ஆனாலும் மும்பை மாநகராட்சி அடாவடியாக மேற்கொண்ட கங்கானா ரனவத் அலுவலக இடிப்பு குறித்தும், சிவசேனா தொண்டர்கள் முன்னாள் கடற்படை அதிகாரியை கொடூரமாக தாக்கியது குறித்தும் நேரடியாக எதுவும் கூறாததால் மக்களிடையே உள்ள அதிருப்தி குறையவில்லை என மகாராஷ்டிர அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Views: - 8

0

0