மும்பையில் பின்னணி பாடகர் கே.கே.வின் உடலுக்கு பொதுமக்கள், பிரபலங்கள் அஞ்சலி.. இன்று மதியம் உடல் தகனம்!!

Author: Babu Lakshmanan
2 June 2022, 10:17 am
Quick Share

மாரடைப்பால் மறைந்த பின்னணி பாடகர் கே.கே.வின் உடல் மும்பையில் உள்ள வெர்சோவா பிளாசாவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது

தமிழ் சினிமாவில் 50க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய கிருஷ்ணகுமார் குன்னத், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார். காதல் மற்றும் கானா பாடல்களின் மூலம் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர்.

நேற்று கொல்கத்தா நஸ்ருல் மஞ்சாவில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல பாடல்களை பாடினார். பின்னர், இரவு 10.30 மணியளவில் தான் தங்கியிருந்த அறைக்கு சென்ற கே.கே., நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

அவரது உயிரிழப்பு திரையுலகிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள வேளையில், கே.கே.வின் மரணம் இயற்கைக்கு மாறானது என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளனர்.

Bengal Pays Gun Salute To Late Singer KK The Netional News

இதனிடையே, நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்ட கே.கே.வின் உடலுக்கு மேற்கு வங்க அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், கொல்கத்தாவில் இருந்து மும்பைக்கு அவரது உடல் அனுப்பி வைக்கப்பட்டது.

நேற்றிரவு மும்பை வந்த பாடகர் கே.கே.வின் உடல் வெர்சோவா பிளாசாவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் 1 மணி அளவில் வெர்சோவா தகன மையத்தில் கே.கே.வின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

Views: - 673

0

0