தங்கையின் ஆசையை நிறைவேற்றிய அக்கா : திருப்பதி கோவிலுக்கு ரூ.9 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் நன்கொடை!!

Author: Udayachandran RadhaKrishnan
17 February 2022, 6:07 pm
Chennai Devotee Donate 9 Crores -Updatenews360
Quick Share

ஆந்திரா : திருப்பதி ஏழுமலையானுக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ரூ.9.20 கோடி நன்கொடை அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த திருமதி ரேவதி விஸ்வநாத்,மறைந்த தன்னுடைய சகோதரி டாக்டர் பர்வதம் நினைவாக அவருடைய பெயரில் வங்கியில் உள்ள 3 கோடியே 20 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பதியில் தேவஸ்தானம் கட்டி வரும் குழந்தைகள் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கினார்.

டாக்டர் பர்வதம் பெயரில் ரூ.6 கோடி மதிப்புள்ள இரண்டு வீடுகளை ஏழுமலையானுக்கு நன்கொடையாகவும் இன்று வழங்கினார். அவற்றுக்கான பத்திரங்களை ஏழுமலையான் கோவிலில் ரேவதி விஸ்வநாத் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஓய்.வி.சுப்பா ரெட்டியிடம் இன்று ஏழுமலையான் கோவிலில் வழங்கினார்.

Views: - 529

1

0