ஆத்மநிர்பர் 3.0 ..! புதிய வேலைவாய்ப்புகளை பெருக்க முக்கியத்துவம்..! நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!

12 November 2020, 2:08 pm
Nirmala_Sitharaman_UpdateNews360
Quick Share

கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தொடர்ந்து பொருளாதார நடவடிக்கைகளை ஊக்கப்படுத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இது சனிக்கிழமை தீபாவளிக்கு முன்னதாக வெளியாகும் மூன்றாவது பொருளாதாரா ஊக்கத் திட்டமாகும்.

“கொரோனா மீட்பு கட்டத்தில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க ஊக்குவிக்கும் ஆத்மநிர்பர் பாரத் ரோஸ்கர் யோஜனாவை நான் அறிவிக்கிறேன். ஈபிஎப்ஒ பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் மாதந்தோறும் ரூ 15,000’க்கும் குறைவான ஊதியத்தில் வேலைக்குச் சேருபவர்களுக்கு இது பொருந்தும்.” என்று சீதாராமன் கூறினார்.

“இது அக்டோபர் 1, 2020 முதல் நடைமுறைக்கு வரும். அவை இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.” என்று அவர் மேலும் கூறினார்.

மேலும் பொருளாதாரத்தின் நிலை குறித்து பேசிய நிர்மலா சீதாராமன், நாட்டில் பொருளாதார மீட்பு நடவடிக்கை நடந்து வருகிறது. ரிசர்வ் வங்கியின் குழு இந்தியா மந்தநிலையை சந்திப்பதாகக் கூறிய அடுத்த நாள் நிர்மலா சீதாராமன் இந்த கருத்துக்களைத் தெரிவித்தார். பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளதையும், அன்னியச் செலாவணி கையிருப்பு 560 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது என அவர் தெரிவித்தார்.

‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு, தெரு விற்பனையாளர்களுக்கான ஆத்மநிர்பர் நிதி” போன்ற கடந்த மாதங்களில் அரசாங்கம் அறிவித்த முக்கிய திட்டங்களின் முன்னேற்றத்தையும் நிதியமைச்சர் பட்டியலிட்டார். செப்டம்பர் 1, 2020 முதல் அமல்படுத்தப்படும் வகையில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தின் கீழ் இருபத்தி எட்டு மாநிலங்கள் தேசிய முறைக்கு மாறியுள்ளன.

பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (பி.எம்.எம்.எஸ்.ஒய்), கிசான் கிரெடிட் கார்டுகள் மற்றும் நபார்டு மூலம் விவசாயிகளுக்கு நிதியளித்தல் ஆகியவை நிதியமைச்சர் கூறியுள்ள மற்ற திட்டங்களில் அடங்கும்.

இந்தியாவில் வலுவான பொருளாதார மீட்சி நடைபெறுவதாகவும் அவர் கூறினார். பொருளாதாரத்தின் நிலையை முன்வைத்து, நிர்மலா சீதாராமன் பங்குச் சந்தைகள் புதிய உச்சம் தொட்டுள்ளது என்றும் இந்தியாவின் வெளிநாட்டு பணம் கையிருப்பு 560 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது என்றும் கூறினார்.

சில ஆய்வு முடிவுகள் பொருளாதாரத்தில் ஒரு தனித்துவமான மீட்சியைக் காட்டுகின்றன என்று நிதியமைச்சர் மேலும் கூறினார்.

மேலும் நாட்டில் தேவையை அதிகரிப்பதற்காக ரூ 2 லட்சம் கோடி உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை (பி.எல்.ஐ) தொகுப்புக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்ததையும் நிர்மலா சீதாராமன் நினைவு கூர்ந்தார். நீர் வழங்கல் மற்றும் திடக்கழிவு மேலாண்மை போன்ற சமூக உள்கட்டமைப்பில் தனியார் பங்களிப்பை ஊக்குவிப்பதற்காக ரூ .8,100 கோடி நம்பகத்தன்மை இடைவெளி நிதி (விஜிஎஃப்) திட்டத்தையும் இது அறிமுகப்படுத்தியது.

இந்த இரண்டு திட்டங்களும் இந்தியாவை சுயசார்பு பாதையில் முன்னோக்கி கொண்டு செல்வதற்கும், நாடு உலகளாவிய மதிப்பு சங்கிலியின் ஒரு பகுதியாக இருப்பதை உறுதி செய்வதற்கும் உதவும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

Views: - 21

0

0

1 thought on “ஆத்மநிர்பர் 3.0 ..! புதிய வேலைவாய்ப்புகளை பெருக்க முக்கியத்துவம்..! நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!

Comments are closed.