மேற்குவங்கத்தில் பாஜக தொண்டர்கள் மீது திரிணாமுல் கட்சியினர் வெடிகுண்டு வீசித் தாக்குதல்..! 6 பேர் படுகாயம்..!

6 March 2021, 12:53 pm
West_Bengal_crude_bomb_blast_BJP_workers_injured_updatenews360
Quick Share

மேற்குவங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் ராம்பூர் கிராமத்தில் நேற்று இரவு நடந்த நாட்டு குண்டு வெடிப்பில் 6 பாரதிய ஜனதா தொண்டர்கள் பலத்த காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கேனிங் துணைப்பிரிவு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்த பாஜக தொண்டர்கள் திருமணத்திலிருந்து திரும்பி வந்தபோது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் தங்கள் மீது குண்டு வீசப்பட்டதாக குற்றம் சாட்டினர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

அரசியல் வன்முறை சம்பவங்கள், சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் மேற்குவங்கத்தில் தொடர்ந்து தலைப்புச் செய்திகளாகி வருவது அதிர்ச்சியளித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் 294 சட்டமன்ற இடங்களுக்கான தேர்தல் மார்ச் 27’ஆம் தேதி தொடங்க உள்ளது. அங்கு எட்டுக்கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 9

0

0